Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கியது சென்னை சில்க்ஸ் நிறுவனம்...

சென்னை சில்க்ஸ் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, அந்நிறுவனம் வழங்கியுள்ளது. 

தியாகராய நகரிலுள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனம், நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்தது. ஏழு மாடிகள்கொண்ட அந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி, இரண்டு நாள்கள்வரை நீடித்தது. முழுவதுமாக சேதமடைந்த கட்டடத்தை இடிக்க, அரசு உத்தரவிட்டது. இன்னும் ஒரு சில தினங்களில் சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மாதத் தொடக்கம் என்பதால், தி.நகர் சென்னை சில்க்ஸில் பணியாற்றி வந்த சுமார் 1,300 ஊழியர்களுக்கும் கடந்த மாதச் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழும்பியது.

மேலும், அவர்களது பணியும் கேள்விக்குரியானது. இந்த நிலையில், ஊழியர்களுக்கான மே மாதச் சம்பளத்தைச் சென்னை சில்க்ஸ் நிறுவனம் நேற்று வழங்கியுள்ளது. அவர்களுக்கான ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் அனைவரும் சென்னை சில்க்ஸின் மற்ற கிளைகளில் பணியாற்றலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை சில்க்ஸிற்கு வேளச்சேரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கிளைகள் உள்ளன.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close