Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோயம்புத்தூரில் யானை தாக்கியதில் 4 பேர் பலி..! ஊர்மக்கள் சோகம்

கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் பகுதியில், யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர்  வனப் பகுதியிலிருந்து யானை ஒன்று கணேசபுரம் ஊர்ப் பகுதிக்குள் வந்தது. அப்போது, காலை 5 மணி அளவில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக மலம் கழிக்கச் சென்ற ஜோதிமணி, நாகரத்தினம் என்பவர்களை யானை மிதித்துக் கொன்றது. அதன்பின்னர் ஊருக்குள் வந்த யானை, வீட்டை உடைத்து, உறங்கிக்கொண்டிருந்த காயத்திரி என்ற 12 வயது சிறுமியையும் மிதித்துக் கொன்றது. மேலும், அவரது தந்தை பழனிசாமி என்பவரையும் மிதித்தது.

அவர், யானையை விரட்ட முயற்சித்தபோது அவரையும் தாக்கியது. இதனால் அவரும் உயிரிழந்தார். மேலும், யானை தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். யானை தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close