Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“விவேகானந்தரை முழுமையாகப் படியுங்கள் வலதுசாரிகளே” கல்லூரியில் ஒலித்த குரல்..!

மாட்டுக்கறி

‘மிருகவதை தடைச்  சட்டம் - 1960 திருத்தத்தின்படி பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது’ என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு வெளியிட்டது. இந்த உத்தரவுதான் நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய விவாதப்பொருளாக மாறியுள்ளது. தனிமனித உணவு உரிமையைப் பறிக்கும் செயல் என்று பலரும் சாடி வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துப் பலரும் போராட்டம் நடத்தும் நிலையில் சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மாட்டுக்கறி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற விருத்தில் மாணவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த நிலையில் அந்த விருந்தில் பங்கேற்ற சூரஜ் என்ற மாணவரை ஓஷன் இன்ஜினீயரிங் பிரிவில் ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த அந்த மாணவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. இதனால் ஐ.ஐ.டி வளாகத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.

மாணவர் தாக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் மாணவ அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவரை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னைப் பல்கலைகழக மாணவர்கள்


மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 31-ம் தேதி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். ‘மாணவர் சூரஜ் மீது ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள்தான் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, அந்த அமைப்பை நாடு முழுவதும் தடைசெய்ய வேண்டும்’ என முழக்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டம் குறித்துப்பேசிய மாணவர் கவித்ரன், “சென்னை ஐ.ஐ.டி-யில் விவேகனந்தர் ஸ்டடி சென்டரில் மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்குத்தான் இந்த கோரிக்கையை வைக்கிறேன். மாட்டுக்கறியை சாப்பிடாதவன் இந்துவாக இருக்க முடியாது என அமெரிக்காவில் உரை நிகழ்த்தியவர் விவேகனந்தர். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல்லும் நீங்கள் முதலில் அவரை முழுமையாகப் படியுங்கள். அதன் பின்னர் மாட்டுக்கறிக்குத் தடையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை தொடருங்கள்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சேகுவாரா, “மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களை இந்த பி.ஜே.பி தலைமையிலான அரசு தேசத் துரோகிகள் என்று கூறுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்துவிட்டு தேசத்துரோகிகள் என்ற வார்த்தையை மிக எளிதாக இந்த அரசு கையாண்டு வருவதுதான் மிகவும் நகைப்புக்குரியது. எனவே, தொடர்ந்து மக்களின் விரோதப்போக்கை நடத்திவரும் பி.ஜே.பி ஆட்சியை தூக்கியை எரிவதற்கான எழுச்சி  உருவாவதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.

மாட்டுக்கறி  சாப்பிடும் மாணவர்கள்


இதனைத் தொடர்ந்து பேசிய சுகுமார் தங்கராஜ், “மாட்டுக்கறிக்குத் தடைக் கொண்டுவந்து மிகப் பெரிய அரசியலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பி.ஜே.பி தலைமையிலான அரசு. அரசியல் புதைகுழியில் காணாமல் போவது இனி அந்தக் கட்சியாகத்தான் இருக்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில அரசு மௌனம் சாதித்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் ஒத்து ஊதுவதை நிறுத்திவிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைளை இனிமேலாவது எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.மாட்டுக்கறிக்குத் தடை தொடருமானால் எங்களுடைய போராட்டம் தொடரும்” என்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக துரைசாமி சில நாள்களுக்கு முன்புதான் பதவி ஏற்றார். இந்த நிலையில் மத்திய மாநில - மாநில அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியிருப்பதைப் பல்கலைக்கழக நிர்வாகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதுகுறித்துப் பேசிய மாணவர் ஒருவர், “துணைவேந்தராகப் பதவி ஏற்று சில நாட்கள் மட்டுமே ஆகின்ற காரணத்தால் எங்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. இல்லை என்றால் எங்களுடைய போராட்டத்தை ஒடுக்கியிருப்பார்கள். பல்கலைக்கழகம் எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் மாட்டுக்கறிக்குத் தடைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close