Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலில் கலப்படம்! சிபிஐ விசாரணை கோரி வழக்கு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மகிழ்ச்சி

பால் கலப்பட விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்துள்ளதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்றுள்ளார்.

தமிழகத்தில், பெரும்பாலான மக்கள் தனியார் பாலையே வாங்குகிறார்கள். அரசின் ஆவின் பாலை மக்கள் பயன்படுத்துவது குறைவாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில், தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும் அந்தப் பாலை அருந்துபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். மேலும்,  தனியார் பால் புனேவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஆய்வறிக்கை வந்தவுடன் தனியார் பால் நிறுவனங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.

இதனிடையே, அமைச்சரின் குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன. "நாங்கள் பாலில் கலப்படம் செய்வதில்லை. பாலில் கலப்படம் செய்யப்படுவதை அமைச்சர் நிரூபிக்கட்டும்" என்று சவால் விடுத்தன. இந்நிலையில், தமிழக அரசிடம் இருந்து தனியார் பால் ஆய்வுக்கு வரவில்லை என்று புனே ஆய்வு நிறுவனம் அதிர்ச்சித்  தகவலை வெளியிட்டது. முன்னதாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை முதல்வர் பழனிசாமி அழைத்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, பால் கலப்படம் பற்றிப் பேசுவதை அமைச்சர் நிறுத்திவிட்டார்.

இதனிடையே, பால் கலப்பட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், "பாலில் ரசாயனம் கலப்பது தெரிந்தும் தமிழக அரசு தடுக்காமல் மெளனம் காக்கிறது. பாலில் ரசாயனம் கலப்பதாக தமிழக அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்குவருகிறது.

இந்த நிலையில், பால் கலப்படம் தொடர்பாக நுகர்வோர் வழக்குத் தொடர்ந்துள்ளதை வரவேற்றுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கலப்படம் குறித்த அரசின் ஆதாரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எல்லா நிறுவன பால்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும். ஒரு சில தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்கின்றன. ஆவின்பால் முதற்கொண்டு எல்லா பால்களும் சோதனைசெய்யப்படும்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close