Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழிசை செளந்தரராஜனுக்கு மு.க.ஸ்டாலின் திடீர் வாழ்த்து!

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜனை திடீரென தொலைபேசியில் தொடர்புகொண்ட தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு, மாட்டிறைச்சித் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த விமர்சனத்தைக் கண்டித்துவரும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஸ்டாலினுக்கு எதிராக  பல கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்.

இதனிடையே, சென்னையில் நாளை நடைபெறவுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழாவுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க தவிர்த்து மற்ற கட்சியினருக்குத் தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக, ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார் தமிழிசை. "அரசியல் நாகரிகம் தெரியாதவர் ஸ்டாலின்" என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக, "திராவிடக் கட்சிகளை அழிக்க நினைக்கும் பா.ஜ.க-வை எப்படி அழைக்க முடியும்" என்று ஸ்டாலின் கூறினார்.

இரண்டு பேரும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், இன்று தமிழிசைக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார், ஸ்டாலின். தொலைபேசியில் தமிழிசையைத் தொடர்புகொண்டு பேசிய ஸ்டாலின், பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இந்த அழைப்பை எதிர்பார்க்காத தமிழிசை, அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close