Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! அமைச்சர் ஜெயக்குமார் கலகல

'ஓ.பன்னீர்செல்வம் அணியிலுள்ள நிர்வாகிகள், எங்கள் அணிக்கு வரத் தயாராக உள்ளனர்' என்று தமிழக நிதியமைச்சரும் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவருமான அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Jayakumar
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பிளவுபட்ட அ.தி.மு.க., மீண்டும் இணையும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இரு அணிகளுக்குள்ளும் மீண்டும் பனிப்போர் நடந்துவருகிறது. கட்சி இணைப்புகுறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.  கட்சி நிர்வாகம், பதவி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சிக்கல் நிலவிவருகிறது.

சசிகலா அணி என்றும் பின்னர் டி.டி.வி.தினகரன் அணி என்றும் அழைக்கப்பட்டுவந்த அணி, தற்போது எடப்பாடி பழனிசாமி அணியாக மாறியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாகத் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது என்று பேச்சு எழுந்துள்ளது. ஆனாலும், அ.தி.மு.க வினுடையது என்று கூறப்படும் 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசைப் பற்றி தொடர்ச்சியாக விமர்சனங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

 அதற்கு, நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று விளக்கம் அளித்துள்ளார். ‘ 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழில் வெளிவரும் செய்திகளுக்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை. அவை, அ.தி.மு.க-வின் கருத்துகள் கிடையாது' என்றார் தடாலடியாக. மேலும் ’ஓ.பி.எஸ் அணியில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் எங்கள் அணியில் சேரத் தயாராக உள்ளனர்.  'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்றும் தெரிவித்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close