Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ஜி.எஸ்.டியை குறைக்காவிட்டால், சினிமாவை விட்டு விலகிவிடுவேன்!' - 'கட்டபொம்ம' கமல்

“சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது போல இந்தியத் திரைப்படத் தொழிலுக்கு 28% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” - இதுவே ஒட்டுமொத்த திரையுலகின் கூக்குரல். 

வரி, கமல்

‛இசையமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவரும் இணைந்ததே திரைப்படம். ஆனால் கிரியேட்டிவ் ஆர்ட்டுக்கு 18% வரியை விதித்திருக்கிறது. ஆனால் திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 28% ஜி.எஸ்.டி. விதித்திருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு திரைப்படமும் கிரியேட்டிவ் கலைஞர்களின் கூட்டணியில்தான் உருவாகிறது. கிரியேட்டிவ் ஆர்ட்டுக்கு 18 சதவிகிதம், திரைப்படங்களுக்கு 28 சதவிகிதம் எனப் பிரிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆகையால் 12% - 18% ஆக ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படவேண்டும்’ என்பதே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் வாதம். தமிழ் மட்டுமல்ல, இந்தியாவின் பிராந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, மணிப்பூரி என்று அனைத்து மொழித் திரைப்பட அமைப்பின் வாதமும் இதுவே.

இதுகுறித்து கமல் பேசும்போது, “திடீரென ஜி.எஸ்.டி-க்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறோம் என்று எங்களை எண்ணிவிடக்கூடாது. வரி குறித்து நான்கு வருடமாக முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் எனத் தனித்தனி அமைப்பு மூலமாக அரசை அவ்வப்பொழுது அணுகிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. தூக்குத் தண்டனைக்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு வரையிலும் முயற்சியைக் கைவிடாமல் போராடணும். அதைப்போலத்தான் இதையும் பார்க்கிறேன். ஜி.எஸ்.டியை எங்களுக்கான தண்டனையாகத்தான் பார்க்கிறேன். வரி கட்ட மாட்டோம் என்று சொல்லவில்லை. எங்களின் இயலாமையைத்தான் எடுத்துச் சொல்கிறோம். 

பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான். அதனால் இதைப் பாவம் செய்யும் துறையாக ஒதுக்கிவிடக்கூடாது. உலக நடப்புகளும் செய்திகளும் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு கலையும் முக்கியம். இவற்றை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்தியவர்களின் நிலை என்னவென்பதையும் வரலாற்றில் பார்க்கிறோம். 

தமிழுக்கு நிகராக இந்திப் படங்களுக்கும், ஹாலிவுட் படங்களுக்கும் ஒரே வரி விதிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதற்காக மொழிகளைப் புறக்கணிக்கிறேன், தேசப்பக்தி இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. நம்முடைய தேசிய கீதம் பெங்காலி மொழிதான். அதை இன்றும் பாடிக்கொண்டுதான் இருக்கிறேன். 

சினிமாதான் என் வாழ்க்கை. சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கிறேன். எனக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. திடீரென என் தொழிலுக்குப் பிரச்னையென்றால் எனக்கு கோபம் வரத்தான் செய்யும். ஜி.எஸ்.டியைக் குறைக்காவிட்டால், சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்பது உறுதி.

இந்தியாவில் வருடத்திற்கு 2100 படம் வெளியாகிறது. அதில் பாலிவுட்டில்  மட்டும் 400 படங்கள். மீதி படங்கள் பிராந்திய மொழிகளில் வெளியாகின்றன. இதில் பாலிவுட்டுடன் மற்ற மொழிப் படங்களை எப்படி ஒப்பிட முடியும்? ஏனெனில் பாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களின் பட்ஜெட்டில் பத்தில் ஒரு மடங்குதான் பிராந்திய மொழியில் வெளியாகும் படங்களின் பட்ஜெட். சின்ன பட்ஜெட் படங்களே பல விருதுகளையும் கெளரவங்களையும் இந்தியாவிற்கு சேர்த்துவருவதையும் மறந்துவிட வேண்டாம். 

இந்தியாவில் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதும் நமக்குத் தெரியும். ஏனெனில் வெளிப்படைத்தன்மை எங்கும் இல்லை என்பதற்கு இந்த நாடே உதாரணம். ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்துடன் எங்களின் வரியையும் சேர்த்து நாங்கள் எப்படிக் கட்டமுடியும்?

சினிமா அறிவு சார்ந்த துறை. பாலிவுட் மட்டுமே இந்திய சினிமா அல்ல. பிராந்திய மொழி சினிமாக்கள்தான் இந்தியா சினிமாவின் பலம்.   ஜி.எஸ்.டி. அதிகரித்தால் திரைப்படங்கள் வெளியாவது குறையும். அதுமட்டுமின்றி திருட்டு விசிடியும், கறுப்புப் பண புழக்கமும் அதிகரிக்கும். அந்த மோசமான எதிர்காலம் என் கண்ணுக்கு இப்போதே தெரிகிறது. 

வரி கட்டாமல் இருக்க நான் என்ன கட்டபொம்மனா?, இந்தியாவும் என்ன கிழக்கிந்திய கம்பெனியா? ஜி.எஸ்.டி-யைக் குறைக்கவேண்டும் என்பது எங்களின் விண்ணப்பம் என்று கூட எண்ணவேண்டாம். எங்களின் முறையீடு அவ்வளவே” என்றார் கமல்ஹாசன். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close