Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாய்ச்சண்டை விசாரணை... ஆளை விட ரூ.10 ஆயிரம் வாங்கிய போலீஸ்!

 வாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருந்த நான்கு பேரை மடக்கி விசாரணை நடத்திய போலீஸார், இறுதியாக "ரூ.10 ஆயிரத்தைக் கொடுத்து விட்டு நீங்கள் ஜாமீனில் போகலாம்" என்று  தீர்ப்பளித்து, அதன்படி பணமும் பெற்றுள்ள விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது.

லஞ்சம்

 சென்னை திருவொற்றியூர் காவல்நிலைய எல்லையில் வருகிறது, சத்தியமூர்த்தி நகர். ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கே வசித்துவருகின்றன. அனைவருமே சென்னை மாநகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தப் பணியில் உள்ள துப்புரவுத் தொழிலாளிகளே. தங்களுக்குள் ஒரு இணைப்புப் பாலமாக, 'ஆதி ஆந்திர சேவா சங்கம்' என்ற சங்கத்தையும் நடத்திவருகின்றனர். கடந்த 30 ஆம் தேதி இரவு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த   துப்புரவுத் தொழிலாளிகள் சின்னகோட்டையா, சாம்சன், சுரேஷ், குமார் ஆகியோருக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரோந்துப்பணியில் இருந்த காவலர்கள் ஜெகேந்திரன், அசோக் ஆகியோர் அங்கு வந்து, தகராறில் ஈடுபட்டவர்களை திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துப்போய் விசாரித்துள்ளனர்.

போலீஸ் பிடித்துச்சென்ற சின்ன கோட்டையா,  மறுநாள் காலை, படுகாயத்துடன் திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டுள்ளார். "திருவொற்றியூர் போலீஸார் என்னிடம் ரூ.10 ஆயிரத்தை வாங்கிக்கொண்டுதான் விடுவித்தனர். என் மீதான வழக்குகுறித்து ஏதும் விபரம் தெரியவில்லை" என்று தன்னைப் பார்க்க வந்த உறவினர்களிடம் சின்னகோட்டையா கதறியுள்ளார். ஆதி ஆந்திர சேவா சங்க நிர்வாகிகள், நடந்த விபரத்தை சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனுவாக அனுப்பிவிட்டு, நியாயத்துக்காகக் காத்திருக்கின்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close