Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவையை மிரட்டிய யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது..!

கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமத்தில் நேற்று அதிகாலை, காட்டு யானை புகுந்தது. இந்த யானை, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி, வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம், ஜோதிமணி, பழனிசாமி ஆகிய நான்கு பேரை மிதித்துக் கொன்றது. மூன்று பேர் காயமடைந்தனர்.

Elephant


இந்நிலையில், யானையைப் பிடிக்க வனத்துறையினர் கும்கி யானையை வரவழைத்தனர். இருந்தாலும், பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர். பின்னர், மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க முயன்றனர். யானை அங்கும் இங்கும் ஓடியதால், மீண்டும் மயக்க ஊசி போடப்பட்டது. இதையடுத்து, கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றினர். இந்த யானை, டாப்சிலிப்பில் உள்ள வரகழி முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.


இன்று அதிகாலை, வனத்துறையினர் யானையை வரகழியாறு வனப்பகுதியில்  விட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close