Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கருணாநிதியின் காந்தக் குரலை எதிர்பார்த்திருக்கிறோம்'... ஸ்டாலின் நெகிழ்ச்சி!

 

 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் இன்று. வழக்கமாக இந்நாளில், தி.மு.க தொண்டர்களை அவர் சந்தித்து வாழ்த்துப் பெறுவார். ஆனால், உடல்நலம் குன்றியிருப்பதால் தனது கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார். இன்று மாலை, அவரது சட்டமன்ற வைர விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ் குமார் உட்பட பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இன்று காலையிலிருந்து கருணாநிதிக்குப் பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தி.மு.க செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் தனது முகநூலில், கருணாநிதி குறித்து வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

stalin

அதில், 'ஓய்வறியா சூரியனாக 80 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான தலைவர் அவர்களின் 94-வது பிறந்தநாள் மற்றும் அவரது சட்டமன்றப் பணிகளுக்கான வைர விழா காண்கின்ற இந்த நன்னாளில் நாம் மட்டுமன்றி, இந்திய நாடே அவரை வாழ்த்துகிறது. உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் உள்ளத்தால் வாழ்த்துகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளில், கழக உடன்பிறப்புகளை நேரில் சந்தித்து அவர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் அன்பான பரிசுகளையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைபவர் தலைவர். தமிழினத்தின் உரிமைக்கும் மேன்மைக்கும் ஓயாது பணியாற்றிய காரணத்தால், தற்போது அவரது உடல்நிலை ஒத்துழைக்க மறுத்து, ஓய்வு தேவைப்படுகிறது.

தலைவரின் சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஓய்வு கிடையாது. அவர்தான் எப்போதும்போல நம்மை வழிநடத்துகிறார். இத்தனை காலம் நமக்காக அவர் உழைத்த நிலையில், அவரது லட்சியங்கள் நிறைவேற நாம் அவருக்காக உழைப்பதே, தலைவருக்கு வழங்கக்கூடிய பிறந்தநாள் பரிசாக அமையும். விரைந்து உடல்நலன் தேறி, தமிழகத்தைக் கவர்ந்த தனது காந்தக் குரலால், ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’ என்று அழைக்கும் நாளினை எதிர்பார்த்திருக்கிறோம்.

அந்தக் குரல் விரைந்து ஒலிக்க, தற்போது அவருக்கு ஓய்வு தந்து, அவரது பணிகளைச் செய்து முடிப்போம். அந்த வெற்றி தரும் ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும், தலைவரின் குரல் கேட்போம். நூறாண்டு கடந்தும் அவர் வாழ்வாங்கு வாழ வணங்கி வாழ்த்திடுவோம்', எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close