Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

'கட்சிப் பணியைத் தொடர டி.டி.வி.தினகரனுக்கு உரிமை உண்டு' என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது, முதல்வர் பழனிசாமி அணியை அதிரவைத்துள்ளது.

இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரனை டெல்லி போலீஸார் ஏப்ரல் 25ஆம் தேதி கைதுசெய்தனர். சென்னைக்கு அழைத்துவரப்பட்ட தினகரனிடம், ஐந்து நாள்கள் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அவரது நண்பர்கள், உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மே 1ஆம் தேதி, திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்டார்.

ஒரு மாதத்துக்கு மேல் சிறையிலிருந்த தினகரனுக்கு, ஜூன் 1ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்றிரவு சிறையிலிருந்து வெளியேவந்தார். இன்று காலை, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "மீண்டும் எனது கட்சிப் பணியைத் தொடர்வேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியதாக யாரும் அறிவிக்கவில்லை. கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு, பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரமுள்ளது" என்று கூறினார். தினகரனின் இந்த அதிரடி அறிவிப்பு, முதல்வர் பழனிசாமி அணியை அதிரவைத்துள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், "தினகரனை கட்சியிலிருந்து நீக்கியது உறுதியான முடிவு. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவரை நாங்கள் சந்திக்கத் திட்டமுமில்லை. எடப்பாடி அரசின் பின்னாலிருந்து சசிகலா, தினகரன் ஆகியோர் இயக்குவதாக சிலர் கூறுகிறார்கள். உண்மையில் யாரும் எங்களை இயக்கவில்லை. சசிகலா, தினகரன் ஆகியோரைக் கட்சி பொறுப்பிலிருந்து நாங்கள் நீக்கவில்லை எனவும் சொல்கிறார்கள். இதற்கான பதிலைத் தேர்தல் ஆணையம் விரைவில் தெரிவிக்கும்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்துத் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பதற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துப்பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சீனிவாசன், தினகரனை நாங்கள் கட்சியை விட்டு நீக்கவில்லை. அவராகத்தான் போனார். கட்சி பணிகளில் ஈடுபடுவதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அது, அவருடைய விருப்பம். தினகரனை சந்திக்கமாட்டோம் என ஜெயக்குமார் சொன்னது அவரது சொந்தக்கருத்து" என்றார்.

தினகரனுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமாரும் ஆதரவாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் கருத்துத் தெரிவித்திருப்பது, முதல்வர் பழனிசாமி அணியை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close