Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (CII) மூன்றாவது தென்மண்டல மாநாடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடந்தது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

Edappadi Palanisamy


அப்போது பழனிசாமி பேசுகையில், "2015ஆம் ஆண்டு செப்டம்பர் 9,10 தேதிகளில் உலகமே பாராட்டும் வகையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாட்டில், ஜெயலலிதாவால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதை அனைவரும் அறிவோம். தகவல் தொழில் நுட்பம், உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறை என அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியைக் காணும் வகையில், முதலீட்டுக்குத் தேவையான ஓர் உகந்த சூழல், தமிழகத்தில் எப்போதும் திகழ்ந்துவருகிறது. இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல, ஜெயலலிதா வகுத்துத் தந்த 'விஷன் 2023' என்ற தொலைநோக்குத் திட்டம், பல்வேறு துறைகளில் நமது மாநிலம் எய்தவேண்டிய இலக்குகளையும், செயல்படுத்த வேண்டிய திட்டங்களையும் மிகத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளது.


 2014ஆம் ஆண்டில், தொழில் கொள்கை, தானியங்கி மற்றும் தானியங்கி உதிரிப்பாகங்களுக்கான தொழில் கொள்கை மற்றும் உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. விரைவில் புதிய வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை தொழில் கொள்கை வெளியிடப்பட உள்ளது. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மதுரை – தூத்துக்குடி "தொழில் பெருவழிச்சாலைத் திட்டம்" ஒன்றை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. மே, 2011 முதல் டிசம்பர் 2016 வரையிலான காலத்தில், மாநிலம் ஈர்த்த அந்நிய நேரடி முதலீட்டு வளர்ச்சி விகிதம், 263 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2011 முதல் 2017 வரை தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்ட முதலீடு 3,07,457 கோடி ரூபாய்.  இது மட்டுமன்றி, மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, விசாகப்பட்டினம் – சென்னை – தூத்துக்குடி – கன்னியாகுமரி வரை ஒரு தொழிற் பெருவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த உலக முதலீட்டாளர் மாநாட்டினை 2018 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை, இந்த அரசு தொடர்ந்து செய்யும். இந்த பணியைச் செயல்படுத்துவதற்கு, தொழில் முனைவோர் மற்றும் சிஐஐ போன்ற  தொழில் கூட்டமைப்புகளின் ஒத்துழைப்பை நான் இத்தருணத்தில் கோருகிறேன்"  என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close