Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"தீ விபத்துக்கு காரணம் அரசுதான்!" - கொந்தளிக்கும் மக்கள்! #VikatanSurveyResults

தீ விபத்து

ண்டிகை என்றாலே சென்னை மட்டுமல்லாது, சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் புத்தாடைகள், அணிகலன்கள் வாங்க வரும் இடமாக இருப்பது தியாகராய நகர்தான். சாதாரண நாட்களிலேயே மக்கள் கூட்டம் அலைமோதும்; அதுவும் பண்டிகைக்காலம் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. இதனால், போட்டிபோட்டுக்கொண்டு பல முன்னணி நிறுவனங்கள் வணிக வளாகங்களைக் கட்டின. குறுகலான இடங்களில்கூட அடுக்குமாடிக் கட்டடங்கள் எழத்தொடங்கின. இதனால், மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதுடன், போக்குவரத்துப் பிரச்னைகளும் அதிகரித்தன. இந்நிலையில், தி.நகரில் செயல்பட்டு வந்த பிரபல ஜவுளிக்கடையில் இரு தினங்களுக்கு முன் தீப்பற்றியதன் காரணமாக, அந்தக்கட்டடம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. தற்போது, அக்கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கட்டடத்தைப் போன்றே தி.நகரில் பெரும்பாலான வணிக நிறுவனங்களின் கட்டடங்களும் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டவை என்ற சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.'வீதிமீறலில் கட்டடங்கள் கட்டப்பட்டதால் தான், தீயை அணைப்பதற்குக் கூட யாராலும் உள்ளே செல்ல முடியவில்லை' என்ற விவாதம் எழுந்துள்ளது. 'அரசாங்கம் அனுமதி அளித்தது தவறு' என்றும் மக்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து விகடன் இணையதளத்தில் "தி.நகர் விபத்து : அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டும்...?" என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. 

சர்வேயில் பங்கேற்ற பெரும்பாலானோர், "விதிகளை மீறி கட்டப்பட்ட  கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். முறைப்படுத்தப்படாத கட்டடங்களே இதுபோன்ற தீ விபத்துக்கு முக்கியக் காரணம். கடை உரிமையாளர்களை மட்டும் குறைசொல்வதில் எந்த நியாயமும் இல்லை; கட்டடங்கள் கட்ட அனுமதி அளித்த அரசு மற்றும் அதிகாரிகளுக்கும் அதில் பங்குண்டு. அரசு அதிகாரிகள் வேலையைச் சரியாக செய்திருந்தால், இதுபோன்ற விபத்துகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டபின், கட்டட வரைபடத்தில் உள்ளபடிதான் அது கட்டப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமை. அப்படிச் செய்யாததால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன" என்று பதிலளித்துள்ளனர்.

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close