Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைந்த ஜி.டி.பி.யும்... மோடியின் அழைப்பும்!

நரேந்திர மோடி

ந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமான ஜி.டி.பி 7.1 சதவிகிதமாக சரிந்துள்ள நிலையில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

இந்தியப் பொருளாதாரத்தை மதிப்பிடுவதில் ஜி.டி.பி-யின் பங்கு மிகமுக்கியமானது. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் உற்பத்திப் பொருள்களைப் பொறுத்து ஜி.டி.பி குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால், விவசாயம் மிகவும் நலிவடைந்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், எதிர்பார்த்த வளர்ச்சி இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சூழ்நிலையில், ஆறுநாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ள மோடி, அந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். அந்தந்த நாடுகளில் மோடி பேசுகையில், "இந்தியாவில் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டும்" என்று தொழில்நிறுவனங்களையும், தொழிலதிபர்களையும் கேட்டுக்கொண்டார். 

ரஷ்யாவில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து பிரதமர் பேச்சு நடத்தினார், இந்தியா - ரஷ்யா இடையே குறிப்பிட்ட துறைகளில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைப்பது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். ரஷ்யாவில் பல்வேறு மாகாணங்களின் கவர்களையும் சந்தித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்தியா - ரஷ்யா இடையேயான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இருநாடுகளின் மக்களுக்கு இடையே தொடர்பை உண்டாக்குவது பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது.

மேலும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ரஷ்ய தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். குறிப்பாக, உற்பத்தி, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ரஷ்யா முதலீடு செய்ய இந்தியா ஒரு சிறந்த களமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். 

மேலும் அவர், "இந்தியாவின் வளர்ச்சிக்காக, உள்கட்டமைப்பு மேம்பாடு, வேளாண்மை, தொழில்துறை, சேவைத் துறைகளில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வருகிறோம். மெட்ரோ ரயில்சேவை, குடிநீர் வசதி மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற திட்டப் பணிகளுக்கும் அதிக முதலீடு தேவைப்படுகிறது. ரயில்வேத்துறையை நவீனப்படுத்துதல், தேசிய அளவில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணி என பல்வேறு பணிகளைத் துவக்கியுள்ளோம். ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, சுற்றுலா, மருத்துவ வசதிகள் என இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளுக்கு வானமே எல்லை" என்றார். 

இதனைத் தொடர்ந்து, தமது பயணத்தின் நிறைவாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி. பிரான்ஸ் தொழில்நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய அவர் அழைப்பு விடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் குறைந்துள்ள நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பு பயன் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?

- ம. நிவேதா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close