Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டி.டி.வி.தினகரனை வரவேற்கச் சென்ற ஆதரவாளருக்கு நேர்ந்த கதி!'#VikatanExclusive

டி.டி.வி.தினகரன்

சென்னை விமான நிலையத்தில் டி.டி.வி.தினகரனை வரவேற்க சென்ற நடிகர் குண்டுகல்யாணத்தின் மகள் கூட்ட நெரிசலில் சிக்கினார். அப்போது, கை வலியால் அவர் அலறித்துடித்தார். அடுத்து டி.டி.வி.தினகரன் காரை பின்தொடர்ந்து அணிவகுத்து சென்ற கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர், இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க தொண்டர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். விமான நிலையத்தில் காரில் இருந்தபடியே தொண்டர்களைச் சந்தித்தார் டி.டி.வி.தினகரன். கோயில்களில் வழிபாடு செய்த தொண்டர்கள் அந்தப் பிரசாதத்தையும் அவரிடம் கொடுத்தனர். அதை வாங்கி காருக்குள் வைத்துக் கொண்டார் அவர். காருக்குள்ளேயே இருந்தபடி ஆதரவாளர்களுடன் கை குலுக்கினார். ஆதரவாளர்கள் கொடுத்த சால்வையை சிரித்த முகத்துடன் பெற்றுக் கொண்டார்.

 குண்டுகல்யாணமும், அவரது மகள் யோகா கல்யாணமும்

காரை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் அங்கிருந்து கார் புறப்படுவதில் காலதாமதம் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, அ.தி.மு.க.வின் பேச்சாளரும், நடிகருமான குண்டுகல்யாணமும், அவரது மகள் யோகா கல்யாணமும், டி.டி.வி. தினகரனைச் சந்திக்க வந்திருந்தனர். டி.டி.வி. தினகரனைச் சந்திக்க வேண்டும் என்ற  ஆவலுடன் காரை ஆதரவாளர்கள் நெருங்கினர். இதனால் சில ஆதரவாளர்கள் நெரிசலில் சிக்கினர். ஆதரவாளர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதில், கூட்ட நெரிசலில் யோகா கல்யாணத்தின் கை சிக்கிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அவர் அலறித்துடித்தார். இதைப்பார்த்த குண்டுகல்யாணம், மகளை கூட்டத்திலிருந்து வெளியில் அழைத்துவந்தார். பிறகு, அவரை காரில் அழைத்துக் கொண்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 விபத்துக்குள்ளான கார்


 பின்னர், விமான நிலையத்திலிருந்து காரில் டி.டி.வி.தினகரன் வீட்டுக்குப் புறப்பட்டார். அவரது காரை பின்தொடர்ந்து ஆதரவாளர்களின் கார்கள் சென்றன. அப்போது, போட்டி போட்டு கார்கள் சீறிப் பாய்ந்தன. இதில், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், நடிகருமான ஜெ.எம்.பஷீர் என்ற விஜய்கார்த்திக் கார் விபத்துக்குள்ளானது. விமான நிலையம் அருகே விஜய்கார்த்திக்கின் கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் வேகமாக மோதியது. இதில் பின்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தால் நிலைத்தடுமாறிய விஜய்கார்த்திக் கார், முன்னால் சென்ற இன்னொரு கார் மீது மோதியது.

டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் எம்எல்ஏ தலைமையில்  ஏராளமானவர்கள் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். அவர்கள், டி.டி.வி.தினகரன் வாழ்க என்று கோஷமிட்டனர். விமான நிலையத்துக்கு வெளியில் அதிகளவில் அ.தி.மு.க. கொடி கட்டிய ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த ஆட்டோக்களும் டி.டி.வி. காரைத் பின்தொடர்ந்து சென்றன. இதனால் விமான நிலையப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீட்டுக்குச் சென்ற டி.டி.வி.தினகரனுக்கு இன்று மதியம் அசைவ, சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அதை விரும்பி அவர் சாப்பிட்டார்.

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close