Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புரசைவாக்கம் வணிக வளாகத்தில் தீ விபத்து: அலறியடித்து மக்கள் ஓட்டம்!

fire

சென்னையின் பரபரப்பான பகுதியான புரசைவாக்கத்திலுள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. புரசைவாக்கத்தில் சிட்டி மால் எனும் வணிக வளாகம் உள்ளது. எந்நேரமும் மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும் வளாகம் அது. அங்குள்ள ஒரு துணிக்கடையில் இன்று திடீரென தீப்பற்றியது. எதிர்பாராத இந்த விபத்தால் மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

fire

உடனடியாக வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளிலுள்ள தீயணைப்பு மையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவதுமாக ஈடுபட்டது. மேலும் வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. 

            fire

தீ விபத்துக்கான காரணம் குறித்து முழுவிவரம் வெளியிடப்படவில்லை. முதற்கட்ட தகவலின்படி பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சமீபத்தில், தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புரசைவாக்கம் வணிக வளாகத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

 fire

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close