Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என்னை எதிரியாக நினைப்பவருக்குக் கூட நான் எதிரி இல்லை!' - புது உத்வேகத்துடன் தினகரன்

 

தினகரன்

தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், டி.டி.வி.தினகரன் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு நேற்று பிணை கிடைத்தது. இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கட்சி இணைப்பு குறித்தும், இனி வரும் காலங்களில் கட்சி சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு,

'இரு அணியும் இணையும் மற்றும் சின்னம் மீட்கப்படும் என்ற எண்ணத்தில்தான் நான் ஒதுங்கி இருந்தேன். ஆனால், கிட்டத்தட்ட 45 நாள்களுக்குப் பின்னரும் இணைப்பு குறித்த சாத்தியக்கூறுகள் இல்லை. அ.தி.மு.க.வின் இணைப்பிலும், சின்னத்தை மீண்டும் பெறுவதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கட்சித் தொண்டர்கள் கடிதம் வாயிலாக மறுபடியும் நான் செயல்பட வேண்டும் என்று கூறினர். அவர்கள் கோரிக்கைபடிதான் நான் திரும்பவும் களமாட உள்ளேன். இனி ஒரு தொண்டனாக இருந்து கட்சியில் செயல்படுவேன். இந்த இயக்கத்தை வலுப்படுத்துவதும், இணைப்பதும்தான் இனி என் வேலையாக இருக்கும். கட்சியில் இருக்கும் அனைவரும் எனக்கு நண்பர்கள். வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் கட்சியில் பாகுபாடு இல்லை. என்னை எதிரியாக நினைப்பவருக்குக் கூட நான் எதிரி இல்லை.' என்று கூறினார்.

சசிகலா பேனர் அகற்றப்பட்டது குறித்து தினகரன், 'அந்தச் செயல் தவறானது. இது குறித்து காலம் நிச்சயமாக பதில் சொல்லும்.' என்று கூறினார். என்றைக்கும் உண்மை வெற்றி பெறும்.'

பா.ஜ.க தலையீடு குறித்து, 'அமைச்சர்கள் சர்வாதிகரம் படைத்தவர்கள் போல் செயல்படுகிறார்கள். இது குறித்து தெளிவான பதிலை அவர்கள்தான் கூற வேண்டும். சசிகலாவை அடுத்த வாரம் சிறையில் சென்று சந்திக்க உள்ளேன்' என்றார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close