Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.நகர் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள ஓட்டலில் தீ விபத்து!

fire

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஓட்டல் சமீபத்தில் தீக்கிரையான சென்னை சில்க்ஸ் அருகே உள்ளது. சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

fire

துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெரிவிக்கப்பட வில்லை. சம்பவ இடத்திற்கு போலீஸாரும் விரைந்து சென்று விசாரணை நடத்துகின்றனர். ஓட்டலில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை. இந்த தீவிபத்தால் சற்று நேரத்தில் பெரும் பரபரப்பு அப்பகுதியில் தொற்றிக்கொண்டது. நேற்று புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close