Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு பறந்த எம்எல்ஏ-க்கள்..!

ஜெயலலிதாவின் மறைவில் ஆரம்பித்து, அ.தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்கள் நடந்துவருகின்றன. ஓ.பி.எஸ் போர்கொடி, சசிகலா சிறை, எடப்பாடி ஆட்சி, ஆர்.கே.நகர் வேட்பாளர் டி.டிவி தினகரன் கைது, கட்சியிலிருந்து தினகரன் விலகல் எனத் திடீர் திருப்பங்கள் நடந்துவருகின்றன.

TTV Dinakaran


இந்நிலையில், ஜாமீனிலிருந்து வெளிவந்த தினகரன், "கட்சிப் பணியைத் தொடர்வேன். கட்சியை விட்டு என்னை யாரும் நீக்கவில்லை. என்னை நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது" என்று கூறினார். தினகரனின் இந்தக் கருத்து, அ.தி.மு.க வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


"சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி செய்வோம்" என்று சொன்ன அமைச்சர்களே, இந்த விவகாரத்தில் வெவ்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். "தினகரனை அமைச்சர்கள் சந்திக்க மாட்டோம்" என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். "தினகரன் கட்சிப் பணி தொடர்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுப்பார்" என்று அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி தெரிவித்தனர்.


ஆனால், "கட்சிப் பணியைத் தொடர தினகரனுக்கு உரிமை உள்ளது" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதற்கிடையே, 'சசிகலாவை சந்தித்த பிறகுதான் அடுத்தகட்ட முடிவு எடுப்பேன்' என்று தினகரன் கூறியுள்ளார். 

Sasikala


இந்நிலையில்,  சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக எம்எல்ஏ-க்கள் தங்க தமிழ்ச்செல்வன், கதிர்காமு, ஜக்கையன் ஆகியோர் பெங்களூரு சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல வெற்றிவேல் உட்பட சில எம்எல்ஏ-க்கள் இன்று பெங்களூரு செல்ல உள்ளதாகவும் அ.தி.மு.க அம்மா அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, டி.டி.வி தினகரனும் சசிகலாவை இன்று சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close