Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் இருக்கவேண்டியதில்லை': தம்பிதுரை அந்தர் பல்டி

ஜெயலலிதா மறைவும் அதன் பின் அ.தி.மு.க-வில் நடந்துவரும் அரசியல்கள்குறித்தும் அனைவரும் அறிந்த ஒன்றே. சசிகலாவின் ஆதிக்கத்தால், ஓ.பி.எஸ் போர்கொடி தூக்கினார். பிறகு, சசிகலா சிறைக்குச் சென்றார். இதையடுத்து, எம்எல்ஏ-க்கள் சிலர் ஓ.பி.எஸ் பக்கம் தாவினர். ஆனாலும், மீதி உள்ள எம்எல்ஏ-க்களின் ஆதரவைக்கொண்டு, எடப்பாடி ஆட்சியைப் பிடித்தார். இதையடுத்து தினகரன் ஆதிக்கம் ஆரம்பிக்கவே, அவரும் கைதுசெய்யப்பட்டார்.

Thambi Durai


கைதுசெய்வதற்கு முன், 'கட்சியை விட்டு விலகுவேன்' என்று கூறியவர், தற்போது 'மீண்டும் கட்சிப் பணியைத் தொடர்வேன்' என்று கூறியுள்ளார். இது, அ.தி.மு.க தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலா கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறியவர்களில் முக்கியமானவர் தம்பிதுரை. குறிப்பாக, மக்களவைத் துணை சபாநாயகராக இருக்கும் தனது லெட்டர் பேடிலேயே, "கட்சி மற்றும் ஆட்சிப் பணி ஒருவரிடம்தான் இருக்க வேண்டும்" என்று கூறினார்.


 தற்போது தினகரனின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, "கட்சியும் ஆட்சியும் ஒரு சேர இருக்க வேண்டும் என்று சொன்ன காலகட்டம் வேறு. தற்போதைய சூழல் வேறு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலகட்டத்தில் கட்சி, ஆட்சி ஒருவரிடம்தான் இருந்தது. இதனால், சசிகலாவையும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.


ஆனால், தற்போதைய நிலை வேறு. எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஐந்து ஆண்டுகள் முழுமையாக இந்த ஆட்சி நடக்கும். எங்களுக்குள் பிளவு ஏதும் இல்லை. எனவே, கட்சியும் ஆட்சியும் ஒருவரது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close