Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செம்மரக் கடத்தல் விவகாரம் : ஆந்திர ஐஜி அட்வைஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்குறி கிராமத்தில், செம்மரம் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புஉணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், ஆந்திர மாநிலத்தின் செம்மரம் கடத்தல் சிறப்பு தடுப்புப் பிரிவு ஐஜி காந்தாராவ் கலந்துகொண்டார்.

 

அப்போது, "ஆந்திராவில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வனப் பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக் கடத்த, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமத்தில் உள்ள ஒரு சிலர் வருகின்றனர்.  தமிழர்களைக் கைதுசெய்வதாகக் கூறுகிறார்கள். தமிழர்கள் செம்மரம் கடத்துவதில்லை. மலை கிராமத்தில் உள்ள சிலர் பணத்துக்காக ஆசைப்பட்டு செம்மரம் கடத்துகின்றனர்.

 செம்மரங்களை வெட்டிக் கடத்தும்போது பிடிபடுபவர்கள், ஆறு மாதம் சிறைக்குச் செல்கின்றனர். அவர்கள் தங்களது உண்மையான முகவரியைத் தெரிவிக்காததால், அவர்களது குடும்பத்தினரும் இவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்துவருகிறார்கள்.  கடந்த ஏழு ஆண்டுகளில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 29 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பேர் யார் என்றே இதுவரை தெரியவில்லை.  

உங்களுக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது. பிறகு ஏன் செம்மரம் கடத்த வேண்டும்? நீங்கள் இனி உங்கள் குடும்பத்தில் யாரையும் செம்மரம் கடத்த அனுமதிக்கக்கூடாது.  நாம் அனைவரும் இந்தியர்கள். செம்மரம், நமது சொத்து. அதை சீனாவுக்குக் கடத்தக் கூடாது. சீனாவில், செம்மரத்தால் ஆன கட்டில் 2 கோடி வரை விலைபோகிறது. அதை, 200 பேர் தயார்செய்கிறார்கள். சீனா நமது எதிரி நாடு. ஆகவே, செம்மரத்தை யாரும் கடத்தக்கூடாது" என்றார்.  

இந்த விழிப்புஉணர்வு முகாமில், ஆந்திர காவல் ஆய்வாளர் சந்திரசேகர், துணை ஆய்வாளர் அசோக்குமார், வனப் பாதுகாவலர் விஸ்வமூர்த்தி, காவலர்கள் திருபால், சுதிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close