Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலில் கலப்படம்! எடுத்த நடவடிக்கைகள் என்ன? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

chennai high court

பால் கலப்படம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக கூறி அதிரடியை கிளப்பினார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்த குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன. இதனிடையே, பால் கலப்பட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், "பாலில் ரசாயனம் கலப்பது தெரிந்தும் தமிழக அரசு தடுக்காமல் மெளனம் காக்கிறது. பாலில் ரசாயனம் கலப்பதாக தமிழக அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பால் கலப்படம் என்பது மிக முக்கியமான பிரச்னை. பால் கலப்படம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close