Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு : வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

'நீட் தேர்வு வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, 12 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

neet

 

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக, மே 7ஆம் தேதி நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. சிபிஎஸ்இ நடத்திய தேர்வுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. முறைகேடுகளைத் தடுப்பதற்காக, சிபிஎஸ்இ ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

’எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாக்கள் இடம்பெறாததால், நீட் தேர்வு மதிப்பெண்களைவைத்து மாணவர்களைத் தேர்வு செய்ய முடியாது. நீட் மதிப்பெண்கள், ஒரே அளவீடாக அமையாது. நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்’ என  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்குகுறித்து உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் முக்கிய உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளனர்.

‘குஜராத்தி, இந்தி மற்றும் மராத்தி நீட் தேர்வு வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும்’ என்று நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வினாத்தாள்களை, வரும் 12ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close