Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனை அதிரவைத்த ஒட்டுமொத்த அமைச்சர்கள்!

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.

jayakumar

 

முன்னர் அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டுமென்றால், டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓ.பி.எஸ் அணி முன்வைத்தது. அதற்கு, எடப்பாடி அணியும் ஒப்புக்கொண்டது. ஆனால், தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது என்று ஜாமீனில் வெளிவந்த  டி.டி.வி.தினகரன் அதிரடியாகத் தெரிவித்தார். இன்று, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்கச் சென்றுள்ளார். தற்போது, பெங்களூரில் உள்ள ஹோட்டலில் டி.டி.வி.தினகரன் ஒரு எம்.பி, 6 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

இந்தக் குழப்பமான சூழலில், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி, வளர்மதி, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்  உள்ளிட்ட 19 அமைச்சர்கள் அவசரமாகக் கூடி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். தலைமைச்செயலகத்திலுள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் அறையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் பங்குபெறவில்லை. கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.
 

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘முன்னர் அறிவித்தபடி டி.டி.வி.தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களைச் சார்ந்து நாங்கள் இல்லை. அவர்களில்லாத நல்லாட்சி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தினகரன் ஒதுங்க வேண்டும்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close