Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விபரீதம் ஏற்படும்! பெங்களூரில் பழனிசாமி அணியைக் கலங்கடித்த வெற்றிவேல்

vetrivel

டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைக்க எடப்பாடி பழனிசாமி அணிக்கு அருகதை இல்லை என்று எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘முன்னர் அறிவித்தபடி டி.டி.வி.தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களைச் சார்ந்து நாங்கள் இல்லை. அவர்கள் இல்லாத நல்லாட்சி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தினகரன் ஒதுங்க வேண்டும். இல்லையென்றால் விளைவு விபரீதமாகும்' என்றார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், என்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது என்று ஜாமீனில் வெளிவந்தவுடன் அதிரடியாகத் தெரிவித்தார். அதுமட்டுமன்றி, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்கச் சென்றுள்ளார். அவருடன் மூன்று எம்.பி, 6 எம்.எல்.ஏ.க்கள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல், ‘துணைப் பொதுச்செயலாளர் தினகரனைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்கள். தினகரனை ஒதுக்கி வைக்கவோ, பேசவோ அமைச்சர்களுக்குத் தகுதியில்லை. தினகரனை ஒதுக்கிவைத்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். தொண்டர்கள் முடிவுசெய்ய வேண்டியதை அமைச்சர்கள் முடிவெடுக்க முடியாது. அமைச்சர்கள் எடுத்த முடிவுகளுக்கு எல்லாம் கட்டுப்பட முடியாது. ஆட்சிக்குத் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. கட்டுப்பாட வைக்க நினைத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அ.தி.மு.க-விலிருந்து தினகரனை நீக்கும் அருகதை அவர்களுக்கு இல்லை. அமைச்சர்கள் மட்டுமே கட்சியல்ல’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close