Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லோக் ஆயுக்தா விவகாரம்: தமிழக அரசுக்கு 4 வாரம் கெடு விதித்த உயர்நீதிமன்றம்

'தமிழ்நாட்டில், லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து 4 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 


அரசு அதிகாரிகள், ஊழல் புகார்களை விசாரிக்க வழிசெய்யும் வகையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது லோக்ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை உருவாக்குவதற்கான உரிமை, மாநில அரசுகளிடம் இருந்துவருகிறது. இந்தியாவில் சுமார் 20 மாநிலங்கள்  லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழகத்தில் இன்னும் இந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை.

இதுதொடர்பாக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருடைய மனுவில், 'லோக்ஆயுக்தா உருவாக்குவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள்குறித்து அறிக்கை தேவை' என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனு, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நிதிபதிகள் 'நான்கு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close