Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொடநாடு கொலை வழக்கு: சயான் கைது..! மர்மம் விலகுமா..?

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய சயான், இன்று கோயம்புத்தூர் மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது. இந்த எஸ்டேட்டில், காவலாளியாகப் பணியாற்றி வந்த ஓம்பகதூர், ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர், பலமாகத் தாக்கப்பட்டார். கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், ஏப்ரல் மாதம் 28-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் இருசக்கர வாகனத்தில் கார் மோதி உயிரிழந்தார்.

அதன்பின்னர், ஏப்ரல் 29-ம் தேதி, மற்றொரு முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சயான், தன் குடும்பத்தினருடன் காரில் தப்பிச்செல்வதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சயானைப் பிடிக்க தனிப்படையினர் காரில் விரைந்தனர். அப்போது, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது சயானின் கார் பயங்கரமாக மோதியது. இதில், சயானின் மனைவி வினுப்பிரியா, 5 வயதுக் குழந்தை நீத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சயான் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் கோவை கொண்டுசெல்லப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சயான் கைதுசெய்யப்பட்டார். அவரை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்காக கோத்தகிரி அழைத்துச்செல்கின்றனர். பல்வேறு மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கில், சயானின் வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close