Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொடநாடு காவலாளி கொலையில் முக்கிய நபர் கைது!

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படும் சயானை, நீலகிரி போலீஸார்  இன்று கைதுசெய்துள்ளனர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது கொடநாடு கொலை. கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்துவந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பகதூர். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, கொடநாடு பங்களாவின் 10ஆம் எண் நுழைவுவாயிலில் மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். ஆரம்பம் முதலே மர்மங்கள் சூழ்ந்த இந்த விவகாரத்தில் வெளியான தகவல்கள், ஏகப்பட்ட சந்தேக முடிச்சுகளைப் போட்டிருந்தது.

பங்களாவில் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. இது, கொள்ளை முயற்சிதான். அறையின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள், ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும் ஓடிவிட்டனர் என்று முதலில் சொன்ன போலீஸ்,  நான்குபேரை கைதுசெய்த பிறகு, கொள்ளையர்கள்   ஜெயலலிதா, சசிகலா அறையில் நுழைந்திருக்கிறார்கள் என்றும், ஜெயலலிதாவின் பீரோவை உடைத்து, விலை உயர்ந்த ஐந்து கைக் கடிகாரங்களையும் ஒரு க்ரிஸ்டல் சிலையையும் திருடியிருக்கிறார்கள் என்றும், தன் ட்ராக்கை மாற்றியது போலீஸ். அந்த கைக் கடிகாரங்களை விற்றால் மாட்டிக்கொள்வோம் என்பதால், அவைகளை கேரளாவில் உள்ள ஒரு ஆற்றில் வீசிவிட்டனர் என்று கதைகட்ட ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்த அத்தியாயங்கள், போலீஸின் கதைகளை வெளிச்சம்போட்டுக் காட்டின. கைது செய்யப்பட்டவர்களின் கார்களில் கைக் கடிகாரங்கள் இருந்ததாக, போலீஸ் சொல்லி வெளியிட்ட புகைப்படத்தைப் பார்க்கும்போது, அ.தி.மு.க பொதுக்கூட்டங்களின் நுழைவுவாயிலில் ஜெயலலிதா படம் பொறித்த வாட்ச் விற்பார்களே, அதைப்போலவே இருந்தது. ஒருவேளை போலீஸ் சொல்வதைப்போல அவைகள்  விலை உயர்ந்தவைகளாகவே வைத்துக்கொண்டாலும், ஆற்றில் வீசியது எப்படி திரும்பவந்தது என்ற கேள்விக்கு விடை இல்லை. இப்படி ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் நீள நீளமாகக் கதைவிட்டது, நீலகிரி போலீஸ்.

இப்படியான சிக்கலான சூழலில்தான், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி எனத் தேடப்பட்டு வருவதாகச்  சொல்லப்பட்ட  சயான் என்பவர் ஏப்ரல் 29ஆம் தேதி பாலக்காடு அருகே விபத்தில் சிக்கினார்.  இதில், சயானின் மனைவி மற்றும் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சயான் படுகாயமடைந்தார். அவருக்கு, இதுநாள் வரை மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கோவை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த சயானை இன்று அதிகாலை டிஸ்ஜார்ஜ் செய்தது மருத்துவமனை நிர்வாகம்.  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் நீலகிரி போலீஸார் சயானை  கைதுசெய்து கோத்தகிரிக்கு அழைத்துச் சென்றனர். இதிலும் ஒரு சந்தேகம் வலுப்பெற்றிருக்கிறது. டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட சயானின் முகத்தை போலீஸ், மீடியாவிடம் காட்டவே இல்லை. முகத்தை கறுப்புத் துணியால் மூடி அழைத்துச்சென்றனர். ஆரம்பத்திலிருந்தே முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் போலீஸ், சயானின் முகத்தைக் காட்டாதது ஏன். உண்மையிலேயே அது சயான்தானா என்ற சந்தேகமும் எழுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close