Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேவாக் அனுப்பியது இரண்டு வரி... பிசிசிஐ கேட்டது விரிவான ரெஸ்யூம்!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேயின் பதவிக்காலம் முடிவதையொட்டி, அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவித்திருந்தது. பிசிசிஐ-யின் தற்போதைய பயிற்சியாளர் அனில்  கும்ப்ளே, முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டாம் மூடி, இங்கிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் பைபஸ், இந்திய முன்னாள் வீரர்கள் லால்சந்த், ராஜ்புட், தோடா கணேஷ் உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர். காலம் கடந்து விண்ணப்பித்ததால், ஆஸி முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிரேக் மெக்டெர்மட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

சேவாக்

 
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், அவர்களுடைய முந்தைய அனுபவத்துடன் பயோ - டேட்டாவை இணைத்து அனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. மற்றவர்கள் அனைவரும் பிசிசிஐ எதிர்பார்த்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்க, சேவாக் மட்டும் விதிவிலக்கு. ‛ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். தற்போது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுடனும் விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு’ - இதுதான் சேவாக் விண்ணப்பத்தில் இருக்கும் ஒட்டுமொத்த அம்சம். இதனுடன் வேறு எந்தத் தகவலோ, பயோ - டேட்டாவோ இணைக்கப்படவில்லை. 

‛‛சேவாக், சேவாக்தான்... தன் ஸ்டைலில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். பயோ-டேட்டா கூட அனுப்பவில்லை. அவரிடம் விரிவான தகவல்களைக் கோரி இருக்கிறோம்’’ என்றார் பிசிசிஐ அதிகாரி ஒருவர். சேவாக் தற்போது, டிவி சேனல்களில் இந்தி வர்ணனையாளராகச் செயல்படுகிறார். சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை வர்ணனை செய்வதற்காக, இங்கிலாந்து சென்றிருந்தார். தற்போது, அவர் நாடு திரும்பிவிட்டார். ஐபிஎல் போட்டியின்போது, பிசிசிஐ-யில் இருக்கும் முக்கிய அதிகாரி சேவாக்கிடம் வலியுறுத்தியதன் பேரிலேயே, அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சேவாக் உள்பட பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களிடம் விரைவில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அவர்களிடம் கிரிக்கெட் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் இன்டர்வியூ நடத்துவர். தற்போது சச்சின், கங்குலி இருவரும் லண்டனில் உள்ளனர். விரைவில் லட்சுமண் அவர்களுடன் இணைவார். அதன்பின், ஸ்கைப் மூலம் இன்டர்வியூ நடத்தப்படும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close