Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்பவாவது ஒண்ணு கூடினாங்களே! புதுச்சேரியில் ஏற்பட்ட புதுத் திருப்பம்!

புதுச்சேரியில் நடைபெற்ற தேர்த் திருவிழா ஒன்றில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியும் முதல்வர் நாராயணசாமியும் தங்களுக்குள் இருந்துவந்த மோதலை மறந்து, ஒன்றாகத் தேர் இழுத்தனர்.

கிரண்பேடி- நாராயணசாமி

புதுச்சேரியில், மருத்துவ முதுகலைப் படிப்புக்கான கலந்தாய்வின்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, பல தவறுகளுக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிதான் பொறுப்பு என்றும் குற்றம் சுமத்தினார். இதற்கு நாராயணசாமியும் அதிரடி பதில்களைத் தொடர்ந்து அளித்துவந்தார். இருவருக்குமான மோதல், சமூக வலைதளங்களிலும் பேட்டிகளிலும் அதிகப்படியாகவே வெளிப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ’அமைச்சர்களின் அனுமதி இல்லாமல், அரசு அதிகாரிகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்திக்கக்கூடாது’ என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதனால், ஆளுநருக்கும் முதல்வருக்குமான மோதல் அதிகரித்துவிட்டது என்றே புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இன்று, புதுச்சேரியின் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் திருவிழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் தங்களுக்குள் இருந்துவந்த மோதலை மறந்து, ஒன்றாகவே தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்தத் திருவிழா நேர ஒற்றுமை பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close