Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திடீர் மழையால் குளிர்ந்தது சென்னை!


 

சென்னையில் இன்று பிற்பகல் திடீரென மழை பெய்தது. வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலைத் தந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக சென்னையில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே முதல் வாரத்தில் தொடங்கிய அக்கினி வெயில் அதே மாதம் 29ஆம் தேதி நிறைவடைந்தது. இருந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வீடுகளில் படுக்க முடியாமல் தவித்தும் மொட்டை மாடிகளில் படுத்துறங்கும் மக்கள், கொசுக்கடியால் தூக்கத்தைத் தொலைத்தும் வருகின்றனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதனால் அதன் எல்லைப்பகுதியிலுள்ள செங்கோட்டை, கன்னியாகுமரி, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நேற்று 14 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, அடுத்த இரண்டு நாள்களில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மூன்று நாளில் தென்மேற்குப் பருவமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களாக வெயிலால் அவதிப்பட்ட சென்னை மக்களுக்கு இன்று பெய்த மழை சற்று ஆறுதலைத் தந்துள்ளது. ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 2.45 மணிக்குத் திடீரென மழை பெய்தது. காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகளுக்குச் சற்று சிரமம் ஏற்பட்டாலும் மழையால் ஆறுதல் அடைந்தனர். மழை சிறிது நேரமே நீடித்தாலும் சாலைகளில் தேங்குமளவுக்குப் பெய்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close