Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிபதி சரமாரி கேள்வி!

பொட்டு சுரேஷ் வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்காதது ஏன் என சி.பி.சி.ஐ.டிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொட்டு

தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளில் மிகவும் பரபரப்பானது மதுரையில் நடந்த அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷின் கொலை. 2013-ஆம் ஆண்டு நடந்த இந்தக் கொலையில் அட்டாக் பாண்டி முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அட்டாக் பாண்டி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இன்று  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அட்டாக் பாண்டியின் மனு மீதான விசாரணை நடைபெற்றது.

மனுவை விசாரித்த நீதிபதி, 6 மாதத்தில் வழக்கை முடிக்காதது ஏன் என சி.பி.சி.ஐ.டிக்கு கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து விளக்கம் அளிக்கவும், அட்டாக் பாண்டியின் உடல்நிலை பற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்தாண்டு செப்டம்பர் மாதம், வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க சி.பி.சி.ஐ.டிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close