Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இரா.செழியன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு’: எடப்பாடி பழனிசாமி

இரா.செழியன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Edappadi Palanisamy

 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில்,

’முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான இரா.செழியன் அவர்கள் உடல் நலக் குறைவின் காரணமாகத் தனது 94-வது வயதில் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.

மறைந்த  இரா.நெடுஞ்செழியன் அவர்களின் இளைய சகோதரரான இவர் 1962-லிருந்து இருபத்திரண்டு ஆண்டுகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சிறப்பாகப் பணியாற்றி தனது தெளிவான, கண்ணியமான உரைகளால் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றவர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இரா.செழியன் அவர்களுக்கு 2005-ம் ஆண்டு பெரியார் விருதும், 2012-ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா விருதும் வழங்கி கௌரவித்தார்கள். இவர் சமூக நீதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர்.

இரா.செழியன் அவர்களின் மறைவு, தமிழ்நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close