Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அருமை நண்பர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதைப் பொருட்படுத்த வேண்டாம்' - கிண்டல் செய்யும் ஜெயக்குமார்

ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், 'நிதி அமைச்சர் ஜெயக்குமார் எந்த அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.' என்று பகீர் கருத்தைக் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், 'தமிழ்ச்செல்வன் கூறுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.' என்று பதிலடி கொடுத்துள்ளார். 

ஜெயக்குமார்

 

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார். சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு முடிந்த பின் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

அப்போது முதல்வருடனான எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயக்குமார், 'எட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார் முதல்வர். தொகுதி பிரச்னை பற்றி முதல்வர் உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். மேலும், வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்திடுமாறும் அவர் வலியுறுத்தினார். சட்டப் பேரவை கூடஉள்ள நிலையில் அது பற்றியும் எம்.எல்.ஏ.க்களிடம் முதல்வர் கலந்து ஆலோசித்தார்.' என்று கூறினார். 

தங்க தமிழ்ச்செல்வன் கூறிய கருத்து பற்றி வினா எழுப்பியபோது ஜெயக்குமார், 'அருமை நண்பர் தமிழ்ச்செல்வன் சொன்னதை யாரும் பொருட்படுத்த வேண்டாம்.' என்றார். மேலும் அவர், 'தனிப்பட்ட முறையில் தினகரனை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்திருப்பர். அதில் அரசியல் இல்லை. கட்சியின் வழிகாட்டும் குழுதான் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்துகிறது. இந்த ஆட்சிக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை' என்று முடித்துக் கொண்டார். 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close