Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதரவாளர்களுக்கு டி.டி.வி.தினகரன் முக்கிய வேண்டுகோள்!

'நான் கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்' என்று ஏப்ரல் 19-ம் தேதி கூலாகப் பேட்டிக்கொடுத்தார் தினகரன். ஆனால், திகார் சிறையிலிருந்து திரும்பியவுடன் 'நான் கட்சியில் மீண்டும் தொடருவேன். என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு' என்று பல்டி அடித்திருக்கிறார் தினகரன். 

தினகரன் அடையாறு வீடு

 

இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைதுசெய்யப்பட்டார். ஒரு மாத சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் வந்த தினகரன், நேற்று பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் 'அ.தி.மு.க.வின் தொண்டனாக இருந்து கட்சியை வலுப்படுத்துவேன்' என்று சூளுரைத்தார். இதையடுத்து இன்று மட்டும் கிட்டத்தட்ட 24 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் சிக்கல் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் சென்னை, அடையாற்றில் இருக்கும் தினகரன் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எனப் பலர் படையெடுத்து வருகின்றனர். வருபவர்கள் மரியாதை நிமித்தமாக தினகரனுக்குப் போர்த்துவதற்கு சால்வையும், அவரிடம் கொடுப்பதற்கு மலர் கொத்தும் கொண்டு வந்துவிடுகின்றனர். ஒரு கட்டத்தில் இப்படிச் சேர்ந்த சால்வையும் மலர் கொத்தும் மிகவும் அதிகமாகி விட்டதோ அல்லது அவற்றை தினகரன் தவிர்க்க நினைத்தாரோ என்னவோ, அவர் வீட்டுக் கேட்டில், 'தயவு செய்து சால்வை மற்றும் மலர்கொத்தைத் தவிர்க்கவும்' என்ற பதாகையைத் தொங்கவிட்டுள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close