Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க எம்.எல்.ஏ முத்தையா பரபரப்புப் பேட்டி!

அ.தி.மு.க.வின் உட்கட்சி குழப்பம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், பரமக்குடி எம்.எல்.ஏ. டாக்டர்.முத்தையா செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார். 

எம்.எல்.ஏ முத்தைய்யா

அ.தி.மு.க, முதல்வர் எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, மற்றும் தினகரன் அணி என்று மூன்றாக பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு அணியில் இருக்கும் அ.தி.மு.க.வினர் மாற்று அணியினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். எடப்பாடி அணியின் நிதி அமைச்சர் ஜெயக்குமார், 'தினகரனை ஒதுக்கி வைத்தது ஒதுக்கி வைத்ததுதான். நாங்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து எடுத்த முடிவு அது. அதில் உறுதியோடு இருக்கிறோம்.' என்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். மறுபுறம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், 'ஜெயக்குமார் இப்படி பேசுவதற்கு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுக்கிறார். ஓ.பி.எஸ் அணியின் மைத்ரேயனோ, 'ஆட்சியைப் பிடிப்பதற்கு தினகரன் அணிக்கும் பழனிசாமி அணிக்கும் அதர்ம யுத்தம் நடந்து வருகிறது' என்று புலம்பி வருகிறார். 

இப்படிப்பட்ட சூழலில்தான் பரமக்குடி எம்.எல்.ஏ. டாக்டர்.முத்தையா செய்தியாளர்களைச் சந்தித்து அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அவர், 'கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற டி.டி.வி.தினகரனால் மட்டுமே முடியும். 40 முதல் 60 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு. அமைச்சர்கள் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமலேயே முடிவு எடுக்கின்றனர். ஆட்சியையோ, அமைச்சரவையோ கலைக்கும் நோக்கம் டி.டி.வி.தினகரனுக்கு இல்லை. நாளை, முதல்வர் எடப்பாடி கூட்டியுள்ள கூட்டத்தில் எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் கலந்து கொள்வார்கள். அமைச்சர் பதவியை எதிர்பார்த்து டி.டி.வி.தினகரன் அணிக்குச் செல்லவில்லை. மாறாக தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்யும் ஒரே தகுதி தினகரனுக்கு மட்டுமே உள்ளதால்தான் அவரை ஆதரிக்கிறோம்.' என்று பரபரப்பாக பேசியுள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close