Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்பி.,க்கள், எம்எல்ஏ-க்களை சந்திக்கிறார்..!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று தனது ஆதரவு எம்பி., எம்எல்ஏ-க்களைச் சந்திக்கிறார். 


இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறையில் இருந்த டி.டி.வி.தினகரன், சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தார்.

அவருடைய வருகை, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள், தினகரன் அணிக்குத் தாவினர்.

 இதனால், எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவு எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

தினகரனின் வருகையைத் தொடர்ந்து, மீண்டும் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close