Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

'தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்' என அமைச்சர் செங்கோட்டையன் இன்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

செங்கோட்டையன்

விருகம்பாக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வந்திருந்தார். மாணவர்களுக்கான விழா நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்,  ‘தமிழக கல்வித்துறையில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். இதன் ஒரு பகுதியாக, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு தமிழகத்துக்கு வேண்டாமென மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் புதிய கல்வியாண்டில் செயல்படத் துவங்கியுள்ளன. விரைவில் பள்ளி மாணவர்களுக்கு வேண்டிய விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும். தமிழகத்தில், ஆசிரியர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடனே நடைபெற்றது’ என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close