Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனுக்குக் குவியும் ஆதரவு: இன்று மேலும் ஒரு எம்எல்ஏ சந்திப்பு!

டி.டி.வி.தினகரனை ஆளும்கட்சி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்து சந்தித்துவரும் நிலையில்,  இன்று காலை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ., ஏ.கே.போஸ் சந்தித்துள்ளார்.

டிடிவி தினகரன்

டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். 33 நாள்கள் சிறை வாசத்துக்குப் பின்னர் சென்னை திரும்பிய டி.டி.வி.தினகரனுக்கு, எம்எல்ஏ-க்களின் ஆதரவு குவிந்துவருகிறது. சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில், இன்று காலை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ., ஏ.கே.போஸ் சந்தித்தார். 

கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்தே டி.டி.வி.தினகரனை அவரது ஆதரவு எம்பி-க்களும் எம்எல்ஏ-க்களும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதனால், பல நாள்களாக வெறிச்சோடியிருந்த டி.டி.வி.தினகரனின் இல்லம் தற்போது களைகட்டியுள்ளது. எம்எல்ஏ-க்கள் செந்தில் பாலாஜி, ராஜன் செல்லப்பா, பழனியப்பன், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட 25 பேர் நேற்று சந்தித்தனர். மேலும், இரண்டு எம்எல்ஏ-க்கள் தங்கள் ஆதரவைப் பதிவுசெய்தனர். தினகரனைச் சந்தித்த அதே வேளையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எட்டு மாவட்ட எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று காலை டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, கூடுதலாக இரண்டு எம்எல்ஏ-க்கள் தினகரனைச் சந்தித்துள்ளனர். திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன், தற்போது டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு வந்துள்ளார். இதனால் டி.டி.வி. ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close