Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரும் தேர்தல் இதாகத்தான் இருக்க வேண்டும்! தமிழிசை கலகல

வரும் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலாக இருக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலாக இருக்கக்கூடாது" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

தமிழிசை சவுந்தரராஜன்

மாட்டிறைச்சி விவகாரத்தில் தலையிட வேண்டாமென, தமிழைசை செளந்தரராஜனுக்கு கடிதம் மூலமாக தற்போது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 'சந்தைகளில் மாடுகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது' என்று மத்திய அரசு தடை விதித்தது. இந்தத்  தடைக்கு  தொடர்ந்து ஆதரவு அளிக்கும் விதமாகவே தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசி வந்தார். இதனால், சில நாள்களுக்கு முன்னர் அவருக்கு மர்ம நபர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

மாட்டிறைச்சி விவகாரத்தில் தலையிட வேண்டாமென்று, முன்னதாக தமிழிசைக்கு தொலைபேசிமூலம் மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக அவர், விருகம்பாக்கம் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த மர்ம நபர்குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் கடிதம்மூலமாக தமிழிசைக்கு மிரட்டல் வந்துள்ளது. இது, இரண்டாவது மிரட்டலாகும். இதுகுறித்தும் தமிழிசை சௌந்தரராஜன் போலீஸில் புகார் பதிவுசெய்துள்ளார். அடையாளம் தெரியாத  அந்த மர்ம நபர்குறித்து விசாரணை துவங்கியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘தமிழக மக்கள் ஒருபோதும்     பா.ஜ.க-வை கைவிட மாட்டார்கள். எதுவானாலும், எந்தவொரு மிரட்டலுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து செயல்படுவேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "அரசியல் நாகரிகம் பேசுபவர்கள், அரசியல் நாகரிகத்தையும் கடைபிடிக்க வேண்டும். ஆட்சியை நிலையானதாக்கிக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. வரும் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலாக இருக்க வேண்டும், சட்டப்பேரவைத் தேர்தலாக இருக்கக்கூடாது" என்று கூறினார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close