Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜூலை 19 வரை சட்டப் பேரவை கூட்டத் தொடர் - சபாநாயகர் தனபால் அறிவிப்பு

'தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர், ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறும்' என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத் தொடரில், ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக சட்டப்பேரவையில் இன்று, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்கள் மற்றும் மானியக் கோரிக்கைகளுக்கான தேதிகள்குறித்தும் முடிவு செய்யப்பட்டது. ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், 'ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை   19 ஆம் தேதி வரை சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும். மொத்தம் 24 நாள்கள் நடைபெறும்.

ஜூன் 14 ஆம் தேதி, வனம் மற்றும் சுற்றுச்சூழல்குறித்து மானியக் கோரிக்கை நடைபெறும். ஜூன் 16 ஆம் தேதி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறைகுறித்த மானியக் கோரிக்கைகளும், 19ஆம் தேதி, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறைகுறித்த மானியக் கோரிக்கைகளும், 20, 21ஆம் தேதிகளில், உள்ளாட்சி, நகராட்சிகுறித்த மானியக் கோரிக்கைகளும் நடைபெறும். மேலும், ஜூலை 10ஆம் தேதி, முதல்வரின் பதிலுரை நடைபெறும். தி.மு.க-வுடன் ஒன்றிணைந்தே கூட்டத் தொடரின் நாள்கள் முடிவுசெய்யப்பட்டது' என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தொடரில்,  ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close