Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா, தினகரன் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எம்எல்ஏ போஸ் அதிரடி பேட்டி!

டி.டி.வி.தினகரனை எம்எல்ஏ-க்கள் சந்தித்துப் பேசுவதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க அம்மா கட்சி எம்எல்ஏ போஸ் ஆகியோர் அதிரடியாகப் பேட்டி அளித்துள்ளனர்.

கட்சிலியிருந்து ஒதுங்கியிருப்பதாக டி.டி.வி.தினகரன் கூறியநிலையில், இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டார். 33 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வந்த தினகரன், மீண்டும் கட்சிப் பணியைத் தொடரப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் பழனிசாமி அணியினர், மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'தினகரனைத் தள்ளிவைத்தது வைத்ததுதான். கட்சிப் பணியில் அவர் ஈடுபட்டால், விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்று அதிரடியாகக் கூறினார். ஜெயக்குமாரின் இந்த பேட்டி, தினகரன் ஆதரவாளர்களை ஆவேசப்படவைத்தது. உடனடியாக தினகரனைச் சந்திக்க ஆதரவு எம்எல்ஏ-க்கள் படையெடுத்தனர்.  முக்கியமாக, தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசமாகப் பேட்டி அளித்தார். "அமைச்சர் ஜெயக்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார். ஜெயக்குமாரோ, "தங்க தமிழ்ச்செல்வனின் பேட்டியைப் பொருட்படுத்த வேண்டாம்" என்று கூறினார்.

இதனிடையே, தினகரனை இன்றுவரை 30 எம்எல்ஏ-க்கள் சந்தித்துள்ளனர். திருப்பரங்குன்றம் எம்எல்ஏ., ஏ.கே.போஸ் இன்று தினகரனை நேரில் சந்தித்துப் பேசினார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தினகரன் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று கூறும் அதிகாரம், பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு. கட்சிப் பிரச்னை தொடர்பாக அமைச்சர்கள் கவனமாகப் பேசவேண்டும். தமிழகத்தில் ஆட்சி கவிழாது. 2021 வரை ஆட்சி நடக்கும். மானியக் கோரிக்கையின்போது, அரசின் முடிவுகளுக்கு ஆதரவாக இருப்போம்" என்று கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "டி.டி.வி.தினகரனை எம்எல்ஏ-க்கள் சந்திப்பதில் தவறில்லை. அவர்கள் துணைப் பொதுச்செயலாளரைத்தானே பார்த்தார்கள். வேறு யாரையும் அவர்கள் பார்க்கவில்லையே. நேரம் கிடைக்கும்போது, அனைவரும் தினகரனைப் பார்ப்போம். எங்களுடைய பொதுச் செயலாளர், சசிகலாதான். கட்சியில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. கட்சியில் இருக்கும் சில பிரச்னைகள் விரைவில் சரியாகிவிடும். இரு அணிகள் இணைய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை" என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close