Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடப்பாடி VS டி.டி.வி : மனம் திறந்தார் ஓ.பன்னீர்செல்வம்!

டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளிவந்த பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட மாற்றங்கள்குறித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

ADMK Merger

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டும் என்றால், டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் கட்சியை விட்டு விலக வேண்டும் என்னும் முக்கிய நிபந்தனையை ஓ.பன்னீர்செல்வம் அணி முன்வைத்தது. தினகரனுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் தெரிவித்தனர். 
 

இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டார். ஜூன் 1 ஆம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. சிறை செல்வதற்கு முன்னர் அ.தி.மு.க-விலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார் தினகரன். ஆனால், சிறையிலிருந்து வந்ததும் கட்சியிலிருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி அணியைக் கலங்கடித்துள்ளார். தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, எடப்பாடி பழனிசாமி ஆதரவு  எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 91 ஆகவும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 12 ஆகவும் உள்ளது.  
 

ஆகவே, தினகரனால் எடப்பாடி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம்,  ’எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எங்களால் எந்த பாதிப்பும் வராது’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஓ.பி.எஸ் இவ்வாறு கூறியிருப்பது இரு அணிகளின் இணைப்புக்கு வழிவகுக்கக்கூடும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்து, தினகரனுக்கு எதிரான சக்தியாக உருவாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close