Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டு போராட்டம்.. சாட்சிகளை கலைக்கப் பார்க்கிறதா அரசுத் தரப்பு?

ஜல்லிக்கட்டு

"வேண்டும் வேண்டும்... ஜல்லிக்கட்டு வேண்டும்” என்று தொடர்ந்து 6 நாள்களுக்கு தமிழர் கடலான மெரினாவில், மக்களின் குரல் ஒலித்தது. 7-வது நாள் அங்கிருந்த சூழல் வேறு. அதுவரையிலும் அறவழியில் போராட்டம் செய்துகொண்டிருந்த மக்கள்மீது காவலர்கள் தாக்குதல் நடத்தி அப்புறப்படுத்தத் தொடங்கியதால், மெரினா கடற்கரையே வன்முறைக் களமானது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எரிப்பு, நடுக்குப்பம் மீனவப் பகுதி மீன் மார்க்கெட் தீக்கிரையானது, போராட்டக்காரர்கள் மற்றும் ரூதர்புரம் - மீனாம்பாள்புரம் பகுதி மக்கள் மீது போலீஸ் நடத்திய தடியடித் தாக்குதல் மற்றும் காவலர்களே வாகனங்களுக்குத் தீ வைத்த சம்பவம் என பல்வேறு வன்முறைகள் அரங்கேறின. 

ஜல்லிக்கட்டு

கமிஷன் குறித்து விழிப்பு உணர்வு இல்லை!

போராட்டத்தின்போது நடந்த வன்முறையை விசாரிக்க நீதிபதி ராஜேஷ்வரனின் ஒரு நபர் கமிஷனை அரசு நியமித்தது. இதில், பாதிக்கப்பட்ட மக்களும் காவல்துறை தரப்பும் அளித்த புகார் மனு மீதான விசாரணை இன்று தொடங்குவதாக இருந்தது. விசாரணை கமிஷன் தொடர்பான போதிய விழிப்பு உணர்வு இல்லாததால், மக்கள் ஆஜராகாமல் விசாரணை வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஜல்லிக்கட்டு

போலீஸின் 2,000 புகார்களும், மக்களின் 800 புகார்களும்...

இது குறித்து மக்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “ரூதர்புரம், நடுக்குப்பம், மீனாம்பாள்புரம், சிவராசபுரம் ஆகிய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு விசாரணை தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. மக்களது புகார் மனுக்களின் அடிப்படையில், நாளொன்றுக்கு 5 பேர் விகிதம் இன்று தொடங்கி 23 ஆம் தேதி முடிய விசாரணை நடப்பதாக இருந்தது. சென்னையில், 800 புகார்கள் மட்டுமே திரட்ட முடிந்தது. கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்தளவுப் புகார்களைக்கூட திரட்ட முடியவில்லை. சென்னையில் இருப்பவர்களுக்கு சம்மன் அனுப்பினோம். சம்மன் வாங்கிக் கொண்டார்கள். ஆனால், இன்று ஆஜராக வரவில்லை. காரணம்... மக்களுக்கு விசாரணை கமிஷன் தொடர்பான போதிய விழிப்பு உணர்வு இல்லை. ஆனால், காவல்துறை தரப்பில் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 2,000 பேர் வரை புகார் அளித்துள்ளனர்”.

ஜல்லிக்கட்டு

மக்கள் ஆஜராகாத காரணம்...

மக்கள் ஆஜராகாத சூழலில், பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ள கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளது அட்வகேட் தரப்பு. ஆனால், இக் கோரிக்கையை கமிஷன் நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே நேற்று, நடுக்குப்பம் மீனவப் பகுதிகளுக்குச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான குழு அங்கிருக்கும் மக்களுக்கு தலா 20,000 ரூபாய்க்கான காசோலை வழங்கியுள்ளதாகக் தெரிகிறது. 

போராட்டத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதி மீனவ மக்களிடம் இதுகுறித்துப் பேசியபோது, ''நேற்று காலையில், கலெக்டர் திடீரென எங்களது பகுதியை வந்து பார்வையிட்டுச் சென்றார். இதுநாள் வரை தனியார் மட்டுமே எங்களுக்கு உதவிவந்த நிலையில், மாலையில் திடீரென அமைச்சர் ஜெயக்குமாரும் வந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 20,000 ரூபாய் செக் கொடுத்துவிட்டுப் போனார்” என்று தகவலை உறுதி செய்தார்கள். 

''போராட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு நொடித்துப் போனவர்கள் நடுக்குப்பம் பகுதி மக்கள். வாழ்வாதாரம் முழுவதும் அழிந்துபோன சூழலில், அப்போது எந்த உதவியையும் செய்ய முன்வராத அரசுத் தரப்பு, விசாரணைக் கமிஷன் தொடங்க இருந்த நிலையில், நேற்று சம்பவ இடத்துக்கேப் போய் பண உதவி செய்துவிட்டு வந்துள்ளது. இது, சாட்சிகளைக் கலைப்பதற்கு அல்லாமல், வேறு எதற்காக இருக்கப் போகிறது?'' என்று கேள்வி கேட்கிறார்கள் மக்கள் தரப்பு வழக்கறிஞர்கள். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close