Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கத்தில் ஜொலித்த கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வின் மகள்!

பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எளிமையைக் கடைப்பிடிப்பார்கள். திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கிறது. மாநில முதலமைச்சர் மானிக் சர்க்கார், தன் சம்பளத்தை அப்படியே கட்சிக்குக் கொடுத்துவிடுவார். கட்சி, அவருக்கு வழங்கும் ஐந்தாயிரம் படியை மட்டுமே அவர் எடுத்துக்கொள்வார். சொத்து எனச் சொல்லிக்கொள்ள, அகர்தலாவில் சிறிய வீடு ஒன்று இருந்தது மானிக் சர்க்காரின் தாய், அந்த வீட்டில் வசித்துவந்தார். தாயின் மறைவுக்குப் பிறகு, ஒரே சொத்தான அந்த வீட்டையும் உறவினர் ஒருவருக்கு வழங்கிவிட்டார். மானிக் சர்க்காரின் மனைவி ஓய்வுபெற்ற அரசு ஊழியர். 

தங்கமாக ஜெலிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மகள்

கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலின்போது, மானிக் சர்க்காரின் வங்கி இருப்பு 16 ஆயிரம் ரூபாய். அடுத்த தேர்தலில் 10 ஆயிரம் ரூபாயாகக் குறைந்தது. மனைவியின் வங்கிக்கணக்கில் சேவிங்ஸ், பி.எஃப் பணம் என 25 லட்சம்  ரூபாய் இருக்கிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் திரிபுரா முதலமைச்சராக மானிக் சர்க்கார் இருந்துவருகிறார். இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மையான முதலமைச்சர் இவர்தான். இவர் மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த நல்லகண்ணு, கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் போன்ற தலைவர்களும் எளிமையானவர்கள்தான்.

தலைவர்கள் இப்படியிருக்க,  கம்யூனிஸ்ட் கட்சி பெண் எம்.எல்.ஏ ஒருவர், மகளின் உடலைத் தங்கத்திலேயே இழைத்து திருமணம் நடத்தியிருப்பது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிக்காரா தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் கீதா கோபி. இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்த இவர், தொடர்ந்து இரண்டு முறை இதே தொகுதி எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன் எம்.எல்.ஏ கீதா கோபியின் மகளின் திருமணம் குருவாயூரில் நடைபெற்றது. திருமணத்தை நடத்தும் பொறுப்பு, ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. திருமணத்துக்காக பணம் வாரி இறைக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்த கேரள முதலமைச்சர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன், பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் நடந்த திருமணத்தைப் பார்த்து வியந்துபோனார். கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் செனிதாலா ஆகியோரும்கூட திருமணத்தில் பங்கேற்றனர்.

திருமணத்தில் மணமகள் கழுத்து முதல் கால் வரை கிலோக்கணக்கில் தங்க, வைர நகைகள்  தொங்கிக்கொண்டிருந்தன. புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. கம்யூனிஸ்ட், கட்சியினர் எளிமையானவர்கள்; வீட்டு விஷேசங்களை எளிமையாக நடத்திவைப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில், கீதா கோபி செயல்பட்டதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து வெளியிட்டிருந்தனர். `இது ஏதோ பில்லியனர் வீட்டுத் திருமணம் என நினைத்துவிடாதீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ வீட்டுத் திருமணம்தான். உச்சத்தில் இருக்கிறது புரட்சி’, `நாக்கில்தான் கம்யூனிசம்; இதயத்தில் முதலாளித்துவம்' என ட்விட்டரில் கேலியும் கிண்டலும் எழுந்தன.

கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மகள்

ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்தத் திருமணம், கேரள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ-வுமான முல்லக்காரா ரத்னக்கரன், இந்தத் திருமணத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். `கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக, மிகுந்த பொருட்செலவில் இந்தத் திருமணம் நடந்துள்ளது. முதலமைச்சர் எப்படி இதுபோன்ற ஆடம்பரத் திருமணத்தில் கலந்துகொள்ளலாம்?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, கேரள மாநில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, எம்எல்ஏ கீதா கோபியிடம் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே,  பிளாஸ்டிக் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருள்களைப் பயன்படுத்தாத திருமண விழாக்களுக்கு, 'green protocal'  பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது கேரள அரசு.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close