Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தீவிரவாதிகளுக்காக இறைவனிடம் இறைஞ்சப் போவதில்லை!''- இறுதிச் சடங்குக்கு இமாம்கள் மறுப்பு

ஸ்லாமிய நண்பர் ஒருவரின் தந்தை இறந்துவிட்டார். இறுதி பிரார்த்தனைக்கு நானும் சென்றிருந்தேன். மயானத்தின் மத்தியில் உடலைக் கிடத்தி, 'இவர் யாருக்காவது கடன் தரவேண்டியது இருந்தாலோ அல்லது யாருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியிருந்தாலோ இறைவனுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள்' என இமாம் உரக்கக் கூறினார். பிறகே உடல் புதைக்கப்பட்டது. ஒருவர் கடனுடன் இறந்துபோனால், அவரது வாரிசுகள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாம் கூறும் நெறி!

இறுதிப் பிரார்த்தனை செய்ய இமாம்கள் மறுப்பு

பிற மதத்தைச் சேர்ந்த ஒருவரின்  இறுதி ஊர்வலத்தைப் பார்த்தால்கூட எழுந்து நிற்க வேண்டும் என்று இஸ்லாம் நெறி வகுத்துள்ளது. போரில்கூட நிராயுதபாணியாக நிற்பவனைத் தாக்காதே எனக் கூறும் குரான், அநியாயமாக உயிர்களைப் பறிப்பவர்களுக்கு இறுதிப் பிரார்த்தனை செய்வதிலும் மாற்றுக்கருத்தைக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், லண்டனில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளுக்கும் இறுதிப் பிரார்த்தனை செய்ய இமாம்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாறாக, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பலியானவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று இமாம்கள் இறுதிப் பிரார்த்தனையும் அஞ்சலியையும் செலுத்திவருகின்றனர். 

லண்டன் பாலத்தில், கடந்த சனிக்கிழமை அன்று மக்கள் கூட்டத்தில் வாகனத்துடன் மோதிய தீவிரவாதிகள், கண்ணில்பட்டவர்களை இறுதிச் சடங்கு செய்ய இமாம்கள் மறுப்புஎல்லாம் கத்தியால் குத்தினர். இந்தத் தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்தனர். 50 பேர்  படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை லண்டன் போலீஸார் சுட்டுக்கொன்றனர். அவர்களில் குராம் ஷாசத் பட்,  ரவிட் ரெட்டானே,  யூசஃப் ஸக்பா ஆகியோர் தீவிரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது.

குராம் ஷாசத் பட்,  பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர்; ஆர்சனல் கால்பந்து அணியின் தீவிர ரசிகர். தாக்குதலுக்கு ஒருநாள் முன்னதாக, ஆர்சனல் அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு குராம் வெளியே சென்றதாக அக்கம்பக்கத்தினர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். குரோம் அணிந்திருந்த ஜெர்சியைவைத்து அவரை போலீஸார் அடையாளம் கண்டனர். 'ஜிகாதி கில்லர் இன் ஆன் ஆர்சனல் சர்ட்' என 'தி சன் ' பத்திரிகை தலைப்பு வைத்து செய்தி வெளியிட்டிருந்தது. சுட்டுக்கொல்லப்பட்டத் தீவிரவாதிகளுக்கு இறுதிப் பிரார்த்தனை செய்ய லண்டன் போலீஸ் பிரிட்டன் இஸ்லாமிய மதத் தலைவர்களை அணுகியது. ஆனால், லண்டனில் உள்ள 130 இமாம்கள், கொல்லப்பட்டத் தீவிரவாதிகளுக்கு இறுதிப் பிரார்த்தனை செய்ய மறுத்துவிட்டனர்.

லண்டன் இஸ்லாம் மையத்தின் தலைவர் மொகமது ஹபீபூர் ரஹ்மான் கூறுகையில், ''தீவிரவாதத்தைக் கையில் எடுப்பவர்கள் நபிகளின் போதனைக்கு எதிரானவர்கள் . தவறான புரிதலே அவர்களை அழிவை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது. தீவிரவாதிகளின் தீய நோக்கங்களை இறைவன் நிறைவேற்ற மாட்டான். தொடர்ச்சியான இந்தத் தாக்குதலால் எங்கள் தேசம் மிகுந்த வேதனையில் இருக்கிறது. நாங்களும் மிகுந்த வலியில் இருக்கிறோம். அடுத்த உயிர்களை அநியாயமாகப் பறிப்பவர்களுக்கு இறைவன் எந்தக் கருணையையும் காட்ட மாட்டான். இஸ்லாத்தைப் பொறுத்தவரை, இறுதிப் பிரார்த்தனை என்பது, மரித்தவர் செய்த தவறுகளுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்சுவதுதான். இந்தத் தீவிரவாதிகளுக்காக நாங்கள் இறைவனிடம் இறைஞ்சப்போவதில்லை'' என்றார்.

மத்திய லண்டனைச் சேர்ந்த ஆஷிம், ``இஸ்லாத்தில் இறுதிப் பிரார்த்தனை மிக முக்கியமானது. மனிதகுலத்துக்கும் மனித நேயத்துக்கும் விரோதமாகச் செயல்படுபவர்களுக்கு இறுதிப் பிரார்த்தனை செய்ய வேண்டாம் என்கிற அரிதான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இறுதிப்  பிராத்தனைக்கான அருகதை தீவிரவாதிகளுக்கு இல்லை. அவர்களது குடும்பத்தினர் வேண்டுமானால் தனியாக பிரார்த்தனை செய்துகொள்ளலாம். 'ஜிகாதி' என்ற பெயரில் மனித சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவர்கள் தியாகிகளா? ஜிகாதியின் அர்த்தத்தை அதன் நோக்கத்தை  உலகமே தவறாகப் புரிந்துகொள்ள வைத்துவிட்டனர் '' என்கிறார் வேதனையுடன்.

தீவிரவாதிகளுக்கு பிராத்தனைச் செய்ய இமாம்கள் மறுப்பு

லண்டன் நகர மேயராக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சித்திக் கான் இருக்கிறார். ``தீவிரவாதிகளின் செயல்களால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமே வேதனையில் ஆழ்ந்திருக்கிறது. உங்களது தீயசிந்தனையும் பலவீனமான சித்தாந்தத்துக்கும் முரட்டுத்தனத்துக்கும் இஸ்லாத்தில் எந்த வடிவிலும் இடமில்லை'' என, சித்திக் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close