Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை!

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைந்து 100 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுநாள் வரை பரபரப்பு இல்லாமல் இருந்து வந்த தமிழக அரசியல், டி.டி.வி.தினகரன் ஜாமீனுக்குப் பின் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பக்கம், இரு அணிகள் இணைப்பு ஒரு பக்கம் என தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 3 மணியளவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் நிர்வாக ரீதியிலான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும், ஜி.எஸ்.டி மசோதா குறித்தும் விவாதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close