Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லீவ் லெட்டர் வாசித்த முத்தரசன்!

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயற்குழு கூட்டம் கோவையில் இரண்டு நாள்கள் நடக்கிறது. இன்று தொடங்கிய கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடக்க உரையாற்றினார். தொடக்கமே அதகளம்தான்.

முத்

கட்சியின் செயல்பாடுகளை செம்மைப்படுத்துவதற்கும், துவண்டிருக்கும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதற்கும், கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதற்கும்தானே செயற்குழு கூட்டம் போடுவார்கள்? அப்படிப்பட்ட கூட்டத்துக்கு ஏராளமான நிர்வாகிகள் வராமல் ‘மட்டம்’ போட்டுவிட்டார்கள். கூட்டத்துக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 40க்குள்தான் இருக்கும். நடப்பதோ.. மாநில செயற்குழு கூட்டம். கூட்டத்தை பார்த்த முத்தரசன் வாட்டமான முகத்துடன் மைக் பிடித்தார், வந்திருந்தவர்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வரவேற்றுவிட்டு, சுணக்கத்துடன்  தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்து படிக்க ஆரம்பித்தார். அதில், பத்து பதினைந்துக்கும் மேற்பட்ட பெயர்கள் இருந்தன. வாசித்து முடித்துவிட்டு, 'இவர்களெல்லாம், செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள். கலந்துகொள்ள முடியாததற்கான காரணத்தைச் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது', என்று சொல்லும்போதே சிலர் சிரிப்பை உமிழ்ந்துவிட்டார்கள். 

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முத்தரசன் பேச ஆரம்பிக்கையில்... கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, தோழர்.. நம்ம ராமசாமி பெயரை விட்டுட்டீங்க என்றார். யார் ராமசாமி என்று முத்தரசன் கேட்க, எழுந்த நபர் விளக்கினார். ஏன்.. முன்னாடியே சொல்ல மாட்டீங்களா.? என்று உள்ளுக்குள் இருந்த எரிச்சலை லேசாக வெளிக்காட்டினார். அத்தோடு விடுவார்கள் என்று பார்த்தால் கூட்டத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக எழுந்து அவர் வரவில்லை தோழர்.. இவர் வரவில்லை தோழர்... என்று ஆளுக்கு ஒரு பெயரை, டீச்சரிடம், ஸ்கூலுக்கு  வராத பக்கத்து பெஞ்ச் பையன் பெயரை சொல்லும் மாணவனைப்போல எழுந்து நின்று சொல்ல ஆரம்பித்தார்கள். வெறுத்துவிட்டார் முத்தரசன். அது ஒரு பத்து பதினைந்து பெயர்கள் இருக்கும் அதையும்  வாங்கி  வாசித்து முடித்த முத்தரசன், “ இது தேசிய கட்சி. நடப்பது மாநில செயற்குழு கூட்டம். நிர்வாகிகள் வரமுடியவில்லையென்றால் கட்சிக்கு முறைப்படி கடிதம் அனுப்ப வேண்டாமா? ஏதோ கல்யாணத்துக்கு வரமுடியலைன்னு பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட சொல்லிவிடுவதைப் போல சொல்லிவிட்டிருக்கிறார்கள்.  இது நல்லாவா இருக்கு.? என்று கோபமாக பேச எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குப் பிறகு ஆலோசனை ஆரம்பமானது!?

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close