Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி... ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றவர்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கம்யூ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை இன்று ஹிந்து சேனா அமைப்பைச் சேர்ந்த 2 பேர் தாக்க முயற்சித்தனர். மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது இந்த சம்பவம் நடந்தது. இதற்கு நாடு முழுவதும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இதனிடையே சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். பழனி, கும்பகோணம், விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்டதுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close