Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிந்தாதிரிப்பேட்டை கூவத்தில் குதித்து திருநங்கை தற்கொலை!

 

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அருகில் உள்ள கூவத்தில், திருநங்கை ஒருவர் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

 


சிந்தாதிரிப்பேட்டை கூவம் கரை அருகே வசித்து வந்தவர், தேவயானி (24). ஆணாக இருந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருநங்கையாக மாறினார். இந்நிலையில், நேற்று இரவு இவர் கூவத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். கூவத்தில் விழுந்ததைக் கண்டதும் அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், நீண்ட நேரம் தேடியும் தெய்வானையின் உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து, மீட்புப் பணியை காலையில் தொடர உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

 


 

இந்தச் சம்பவம்குறித்து தெய்வானையின் உறவினர்கள் கூறுகையில், "அவரது இயற்பெயர் மணி. திருநங்கையாக மாறிய பின்பு, தேவயானி எனப் பெயரை மாற்றிக்கொண்டார். அவருக்கு தந்தை இல்லை; தாய் மற்றும் பாட்டிதான். நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில்தான் வசித்துவந்தனர். 

திருநங்கையாக மாறினாலும் அவரை யாரும் வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்யவில்லை. குடும்பத்தை அவர்தான் காப்பாற்றி வந்தார்; ஆனால், திருநங்கையாக மாறிய பிறகு, அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். ஏற்கெனவே, அவர் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்" என்றனர். இந்தச் சம்பவம்குறித்து, சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் தற்போது விசாரித்துவருகின்றனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close